பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

பலர்புகழ் சிறப்பின் புலவர் (புறம் 72)

பலவந்தமும் பலாத்காரமும் செய்தல்

பவள இதழ்ப் புத்தமுதம் ஒழுகுமதலைக் குதலை (செந்

தூர்ப் பி. த. 36)

பழக்க வழக்கங்கள்

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

பழகிப் பயின்று பண்பட்டவர்

பழமைப் பரம்பரை வழக்கம்

பழமையும் புதுமையும் கலந்த

பழமையும் பெருமையும் உடைய

பழித்து இகழ்ந்து ஒதுக்கித் தள்ளுதல்

பழித்துத் தூற்றி இழிவைப் பறைசாற்றல்

பழித்துப் பரிகசித்தல்

பழித்தும் இழித்தும் பேசல்

பழி பாவங்களுக்குப் பயப்படாதவன்; அஞ்சாதவன்

பழி பாவம் பார்க்காமல் பழிச் செயலில் இறங்குதல்

பழியொடு பாவம் இலார் (ச)

பழியொடு பாவம் அஞ்சும் பண்பு (வீர 4-11-10)

பழுத்துக் கனிந்த பழம்

பழுத்து முதிர்ந்த பழம்; அறிவுடையவர்

பழுது பார்க்காமலும் செப்பனிடாமலும் கிடக்கும் பாதை

பழைய தலைமுறையைச் சேர்ந்த பத்தாம் பசலி

பள்ளத்தில் பாயும் வெள்ளம் போல

பள்ளத்துள் பாயும் வெள்ளம் போல் படரும் உள்ளம்

பள்ளம் படுகுழி பார்த்து நட

பளிச்சென்ற வெளிச்சம் (கல்கி)

பளீர் பளார் என்று அறைதல்

பற்றற்றார் மனத்துறையும் பகவன் (செந் மு சந் 41-5)