பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6


அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும் உடையான் (பெ. தொகை 1495)

அண்ட பிண்ட அனைத்துப் பொருள்களும்

அண்ட பிண்டங்கள்

அண்ட பகிரண்டம் அனைத்திலும் நிறைந்த ஆண்ட வன்

அண்டமும் அகண்ட பகிரண்டமும் - குமர.

அண்டரண்டத்தொடு அகிலாண்டம் படைத்தவன் ஆண்டவன். குமர.

அண்டை அசல்காரர்கள் - நாடோடி

அண்டை அயல் - அக்கம் பக்கம்

அண்டை அயல் பார்த்துப் பேசு

அண்டை அயலார்க்குத் தெரியாமல் செய்

அண்டினோரை ஆதரிக்கும் ஆண்டவன்

அண்டை வீடு அடுத்த வீடு

அண்ணணித்தான- மிகவும் சமீபமான

அண்ணாந்து இறுமாந்து அடிகனத்துப் பூரித்த நகில்

அணங்கு நோய் செய்து அலர் தூற்றும் அனங்கன்(நைட 254)

அணிந்து புனைந்து கொள்ளும்

அணியணியாக அடுக்கி வைத்திருத்தல்

அணை கடந்த வெள்ளம் போல் ஆர்வம் பொங்கு தல்

அணைத்து ஆதரித்தல்

அணைத்து ஆரத் தழுவிக்கொள்ளல்

அணைத்துத் தழுவுதல்

அத்தை மகள் ரத்தினம்

அதட்டலுக்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்படல்

அதட்டலும் மிரட்டலும் அதட்டி உருட்டிக் கேட்டல்