பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

பிரம்மப் பிரயத்தனம் செய்தல்

பிரமித்துத் திகைத்துப் போதல்

பிரித்தும் வரித்தும் பார்த்தல்

பிரியமும் வாஞ்சையும் வைத்திருத்தல்

பிரியேன் பிரிந்தால் உயிர் தரியேன்

பிரிவுகளும் பிளவுகளும்

பில்லி சூனியம் வல்லவர்

பிலுக்கிக் குலுக்கி மேனி மினுக்கும் பெண்கள்

பிழியும் தேனின் பிறங்கு அருவித்திரள் பொழியும்

சோலை (கம்ப 3-3-35)

பிழைப்புத் தழைப்பு - சீவனாதாரம்

பிள்ளை குட்டிகள்

பிள்ளை குட்டிகளைப் பெற்று வளர்த்தல்

பிளவும் பூசலும் மலிந்த நாடு

பிளிறிக் குளிறும் களிறு

பிறர்க்கென வாழும் பெருந்தகை

பிறந்து இறந்து உழலும் பாசப் பிணக்குடைப் பிணி

(கம்ப 5-3-128)

பிறப்பு இறப்ப இல்லாப் பெருங் கடவுள்

பிறப்பிறப்பு மூப்புப்பிணி (அறநெறிச் 117)

பிறப்புப்பிணி மூப்புச் சாக்காடு

பிறப்பு வளர்ப்பு வெவ்வேறு ஊர்

பின்பற்றித் தொடர்தல்

பின்னணிப் பாடகருள் முன்னணியில் இருப்பவர்

பின்னமின்றி ஒன்றாகப் பின்னிப் பிறங்குதல் (வைண

2-7)

பின்னிப் பிணைந்திருத்தல்

பீடழிந்து பெருமை குலைந்து நிற்றல்

பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை (நெடு நல் 106)