பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்

புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை

புலையுங் கொலையும் தவிர்

புலையுங் கொலையும் களவும் தவிர் (கொன்றை 63)

புழு பூச்சிகள்

புள்ளிமான் போல் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடிவரல்

புளகாங்கிதத்தால் உடம்பு புல்லரித்தல்

புளகாங்கிதமும் பரவசமும் அடைதல்

புற்புதமும் தொலை வெய்த நிலை எய்தாப் புலையுடம்பு

(குமர 549)

புறம் பேசிப் பழித்தல்

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாய் (குமர

1-41)

(என்) புன்மொழியை நன்மொழியாகக் கொள்ளுக

புன்னகை பூத்துப் பொலியும் திருமுகம்

புன்னகையும் சாந்தமும் முகத்தில் பொலிதல்

பூக்கவின் கொண்ட புகழ்சால் எழிலுண்கண் (கலித்

131)

பூச்சி புழு அரித்தல்

பூச்சி பொட்டு மிகுந்திருக்கும் புதர்க்காடு

பூசலும் புகைச்சலும் உண்டாதல்

பூசி மெழுகிவிடல்

பூத்து அலர்ந்து பொலியும் மலர்

பூத்துக் காய்த்துப் பழுத்த

பூத்துக் குலுங்கித் தழைக்கும் கொடி

பூத்துக் குலுங்கிப் பொலிவுறும் மரம்

பூர்வகாலத்துப் புண்ணியவசத்தால்

பூர்ணசந்திர விம்மம் போன்ற புன்னகை (மனுமுறை)

பூரித்துக் களிக்கும் நெஞ்சு