பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

பொன்னெனவும் கண்ணெனவும் போற்றி வளர்த்த அன்னை

பொன்னே போல் போற்றுதல்

போக்கிரி சாக்கிரியுடன் சேரக் கூடாது

போக்குச் சாக்குக் காட்டல்

போக்கு புகல் ஒன்றும் இல்லாதவன்

போக்கு நீக்கில்லை மூக்கிலே கோபம்

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியன் (திருவா)

போகபூமியையும் ஏசும் புதுமலர்ச் சோலை (கம்ப 4-3-

30)

போக போக்கியத்துடன் வாழ்தல்

போகமும் புணர்ப்பும் வேண்டா

போகமும் பொருளும் பெற்றோர்

போட்டா போட்டி

போட்டியும் பொறாமையும் ஏற்படுதல்

போட்டியும் போரும் உண்டாதல்

போட்டியோ எதிர்ப்போ இன்றித் தேர்ந்தெடுக்கப்

படுதல்

போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலங்

கொள் திண்தோள் (கம்ப 1-17-18)

போரும் பூசலும் பிணக்கும் கொண்டிருத்தல்

போரெனில் புகலும் புனைகழல் மறவர் (புறம் 31)

போற்றாமாக்கள் தூற்றும் பெரும்பழி (பெருங்க 1-35-

250)

போற்றிக் காப்பாற்றிப் புறந்தந்த

போற்றித் துதித்தல்

போற்றிப் பரவுதல்

போற்றிப் பாதுகாத்தல்

போற்றிப் புகழ்ந்து பாராட்டல் ; பேசுதல்