பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

மண்ணாங் கட்டி தெருப்புழுதி (இகழ்ந்து பேசல்)

மண்ணும் மதிலுமாய்க் கிடக்கும் வீடு

மண்ணுமணி யன்ன ஒண்ணிறத் தெண்ணீர் (பெருங்க

1-40-318)

மண்ணுலகை நீத்து விண்ணுலகை நண்ணுதல்

மண்ணோடு மண்ணாய் மக்கிப் போதல்

மண்ணோடு மண்ணாய் மட்கி மாய்ந்து போகும்

மண், பெண், பொன் ஆசைகள்

மண் மனை எல்லாம் விற்று விடுதல்

மணி மந்திர மருந்துகளால் தீராத நோய்

மணி மந்திர மருந்துகளால் மாறாதமதி அமுதமுண்ட

சித்தர்கள்

மதி கெட்டுக் கதி கட்டு மானங்கெட்டு அலைதல்

மதி கெட்டு மானங் கெட்டுப் போதல்

மதித்துக் கொண்டாடிப் போற்றுதல்

மதித்துப் போற்று

மதி நுதல் மயிலியல் மடவரல் (சிலப் 24-15)

மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரியவர்

மதிப்பும் செல்வாக்கும் பெறுதல்

மதிப்பும் மரியாதையும் கொடுக்கும்

மதிப்பையும் அன்பையுங் கவர்ந்தவர்

மதிப்பையும் மானத்தையும் காத்துக் கொளல்

மதியார் வீடு மிதியார் நல்லார் (குடும்பவி)

மதியுடைய மந்திரிகள் (மனுமுறை)

மதுர அமுதரசம் ஒழுகும் இசைப்பாக்கள்

மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கம் (முருகாற்றுப் 42)

(சூ !) மந்திரக்காளி, மாயக்காளி

மந்திர தந்திரங்களால் மயக்கிவிடல்.

மந்திர தந்திரம் வல்லவன்