பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

மந்திரம் மாயம் இல்லாமல்

மப்புக்காரன் போலத் தப்புத்திப்பாய்ப் பேசுதல் (பழ)

மப்பும் மங்கலுமான மேகம்

மப்பும் மந்தாரமுமான வானம்

மம்மர் எய்திய மடவ மாந்தர் (ஞானா 42)

மயக்கமும் தியக்கமுமாய்க் கிடப்பவன்

மயங்கித் தியங்கித் தவித்தல்; நிற்றல்

மயில் ஆடக் குயில் பாட மணங்கமழும் மலர்ச்சோலை

மர்மப் புதிர் (கல்கி)

மரமட்டைகளை விறகாய் எரித்தல்

மரியாதை தெரியாத மடப்பயல்

மருட்சியும் மயக்கமும்

மருட்டி வெருட்டும்

மருந்தாலும் மணி மந்திரத்தாலும் தீராத நோய்

மருந்து மாயம் தெரிந்தவன்

மருளுங்குதலை மதலை சொலும் மழலை மொழி (வைண

2-40) )

மல் உயர் திணிதோள் மைந்தர் - மற்போரில் உயர்ந்த

வலிமை பொருந்திய ஆடவர் (நைட 20)

மலங்கிக் கலங்கி மயங்கித் தியங்கி மாழாந் திருத்தல்

மலங்கிக் கலங்கி மனமுருகி

மலங்கிக் கலங்கியிருக்கும் நீர்

மலர்கள் மடலவிழ்ந்து மலர்ந்தன

மலர்ந்த செந்தாமரை போல் மனது மிகக் குளிர்தல்

(பஞ்ச வனவாசம் 2)

மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்

மலரும் மணமும் போல் வாழ்தல்

மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு