பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

மலைகலங்கினும் நிலைகலங்காத குணசீலர் (சிறுத்.

கீர்த்.ப 40)

மழலை ததும்பு பசுங்குதலை (குமர)

மழலைப் பசுங்கு தலை ஒழுகு தீங்கிளவி (குமர 10)

மழலை பேசுங் குழவி

மழலை முற்றாத இளஞ்சொல் (திவ் 58)

மழலை மென் சொல் மகார் (காசிகண் 33-48)

மழலை மென்மொழிச் செய்யவாய் மகன் (காசிகண் 76-

13)

மழலை மென் மொழி பேசும் குழவிகள்

மழலை மொழி மதலை (திருப்பு 168)

மழலை மென்மொழி மைந்தர் (காசிகண் 47-4)

மழை தண்ணீர் அங்கு உண்டா? (பே)

மறப்போம் மன்னிப்போம்

மறந்தும் புறந்தொழா மாந்தர் - வைணவர்கள்

மறுக்கவும் வெறுக்கவும் படல்

மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை

மறுவறு முழுவெண் நிலவெழு முறுவல் (செந்தூர்ப்.

பி. த. 2)

மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை

(மனத்தில்) மறைந்து உறைந்து கிடக்கும் எண்ணங்கள்

மறைவு ஒளிவு இன்றிப் பேசுதல்

மன்னுயிரைத் தன்னுயிர்போல் எண்ணும் மன்னன்

மனங்கலங்கித் தடுமாறுதல்

மனங்கலந்து ஒன்றிப் பழகுதல்

மனங்கனிந்து கசிந்து நெகிழ்தல் (மனு முறை)

மனங்குழம்பித் தவித்தல்

மனங்குளிர்ந்து உடல் பூரித்தல்

மனந்தளர்ந்து சோருதல்