பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

மனம் நொந்து இளைத்து வாடியிருத்தல் (மீனாட்சி

தோத்திரம் 9)

மனம் நொந்து நொந்து வருந்துதல்

மனம் நைந்து புண்ணாதல்

மனம் பதைத்து மதிமயங்கி நிற்றல்

மனம் மொழி செயல்களால் தூய்மையுடையவர்

மனம் வாக்குக் காயத்திற்கும் அப்பாற்பட்ட இறைவன்

மனமின்றி வாடுகின்ற மன்னன் (செந். மு. சந். 42-6)

மனமார வாயாரப் பாராட்டுதல் ; வாழ்த்துதல்

மனமொத்து ஒன்றாக வாழ்க

மனையறங்காக்கும் மாண்புடை மங்கை

மனைவி மக்கள் சுற்றம்

மனோவேகமும் பின்னடையத்தக்க வேகமான நடை

(மனுமுறை)

மாசறத் தெளிந்த மணி நீர் (மணி 4-7)

மாசறு காட்சியும் மாட்சியும் உடையவர்

மாசில் கற்பின் மடவோள் (நற் 15)

மாசு மறுவற்றவன்

(நூலின்) மாட்சியும் காட்சியும் போற்றுதற்குரியன

மாட்சியும் மதிப்பும் மிக்க

மாட கூடங்கள் மலிந்த ஊர்

மாட மாளிகை கூட கோபுரங்கள் மலிந்த நகரம்

மாடாய் உழைத்து ஓடாய்ப் போதல்

மாடு கன்று வைத்திருப்பவன்

மாண் எழில் மலருண்கண் (பரிபா 9)

மாண்டு மடிந்து போதல்

மாண்டு மறைந்து போதல்

மாணெழில் மலர்க்கண்ணாள் (நற் 398)

மாதா பிதாக்கள் - தாய் தந்தையர் (பிரதாப 5)