பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

மாமறுத்த மலர்மார்பினன் (புறம் 17)

மாமன் மச்சான் முறை; உறவு

மாமூல் வழக்கப்படி

மாயப்புன் பெருஞ்சூது (வில்லி 11-24)

மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை (பரிபா 20)

மாயம் மந்திரம் வல்லவர்

மாயமில்லை மந்திர(மு)மில்லை

மாயமும் பொய்மையும் வஞ்சகமும் உடையவர் (வருண

குலாதித்தன் மடல்)

மாயமும் மருட்சியும் உடையவர்

மாயமும் வஞ்சகமும் வல்லவர்

மாயிரு ஞாலங் காக்கும் மன்னவன் (காசிகண் 83-14)

மார் மேலும் தோள் மேலும் தூக்கி வைத்து வளர்த்தல்

மார் மேலும் தோள் மேலும் மடி மேலும் வைத்துக்

குழந்தையை முத்தாடல் - இராமலிங்க

மாலை போட்டு மரியாதை செய்தல்

மாலை மயங்கி இருளான போது (கல்கி)

மாலை மரியாதை செய்தல்

மாழ்கி நெஞ்சழிந்து அலமரல் (காசிகண் 50-20)

மாழ்கி மயங்கி வீழ்தல் (சிந் 1800)

மாளாத பேரின்பம்

மாற்றித் திருப்புதல்

மாறாத வறுமையாலும் தீராத பிணியாலும் வாடுவோர்

மாறுபட்ட கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர்

மானம் அபிமானம் இல்லாத

மானம் ஈனம் ஒன்றும் இல்லாதவன்

மானம் மதிப்பு இல்லாத

மானம் மரியாதை இல்லாதவன்