பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

மானம் மாண்பு மாட்சி மரியாதைகளை அழித்துக் கொள்ளல்

மானம் ரோஷம் இல்லாத

மானம் வெட்கம் இல்லாத

மானமிழந்து மதிப்புமிழந்துவிடல்

மானின் தளிர்போலும் மாணலம் (கலித் 132)

மிச்சம் சொச்சம் இல்லாமல் செலவு செய்தல்

மிச்சம் மீதி இல்லாமல் தின்றுவிடல்

மிஞ்சாமலும் கெஞ்சாமலும் இரு

மிடல் உறுபுலன்கள் வென்ற மெய்த்தவர் (கம்பா 5-1-10)

மிடுக்காகவும் துடுக்காகவும் பேசல்

மிடுக்கும் கம்பீரமும் வாய்ந்த நடை (கல்கி)

மிடுக்கும் செருக்கும் உடைய

மிதமிஞ்சிய செல்வாக்கும் புகழும் படைத்த

மிதித்துத் துவைத்தல்

மிதிப்புண்டு நசுங்கல்

மிரட்டலும் உருட்டலும்

மிளிர்ந்து ஒளிரும்

மிளிர் நீறு ஒளிரும் நெற்றி

மின்னும் முழக்கும் - மின்னலும் இடியும்

மின்னென மென்மெல ஒதுங்கித் துளங்கிடை யொல்கப்

பெண் வருதல் (௯ர்ம பு 21 - 97)

மினுக்கித் தளுக்கித் திரிபவள்

மினுக்கும் தளுக்கும் உடைய மின்னார்

மீதி சோதி (-மிச்சம் சொச்சம்) இன்றிச் செலவிடல்

மீதி மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடல்

மீளாத் துயரத்துக்கு ஆளாகிவிடல்

மீளாத பழிக்கு ஆளாதல் (மனுமுறை)