உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8


அபிப்பிராய பேதங்களும் கொள்கை வித்தியாசங் களும்- கல்கி

அம்பலும் அலரும் தூற்றல்

அம்மவோ என அதிசயம் பூத்தல் (காசிகண்-89-2)

அம்மி மிதித்து அருந்ததி காட்டல் (திருமணச் சடங்கு)

அமளிகுமளிப்படுதல்- பேராரவாரம் உண்டாகும்

அமளிதுமளிப்படுதல்-அமர்க்களப்படுதல் ; ஆரவாரம் உண்டாதல்

அமிர் தனைய மழலை மென் மொழிச்சிறுமகார் (சிவராத்பு 1-19)

அமிழ்தத் தன்ன அந்தீங்கிளவி (குறுந் 206)

அமிழ்தினில் தேனில் பாகினில் பழுத்த அம் தீஞ்சொல் (நைட 626)

அமிழ்தின் அன்ன அறுசுவை யடிசில் (பெருங்க 3-14-48)

அமிழ்தினும் இனிய தமிழ்

அமிழ்தினைச் சுவைசெய்தென்ன அழகினுக்கு அழகு செய் தார் (கம்ப 1-22-3)

அமிழ்து அன்ன சுவை இன்னடிசில் (கம்ப 4-14-54)

அமுக்கி அழுத்துதல்; ஆழ்த்துதல்

அமுதத்தீஞ்சொல் மெல்லிசை வீறாம்பாட்டு) - திரு வாலங்காட்டுப்பு.

அமுதவெண் கிரணத் திங்கள் (வில்லி. 11-7)

அமுதின் அன்ன அறுசுவை அடிசில் (பெருங் 2-2-80)

அமுது ஒழுகு புது மொழி (நைட 2)

அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்கும்

அமைதியாகவும் ஒழுங்காகவும் நடந்து செல்லல், கலைந்து செல்லல்

அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்க்கை நடத்துதல் (கல்கி )