பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

மூதண்ட வேதண்ட கோதண்டம் (குமர 34) - முதிய

வானத்தை யளாவிய மேருமலையாகிய வில்

மூப்புப் பிணி சாக்காடு

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கி வழிபடல்,

மூலைக்கு முட்டாக முடங்கிக் கொண்டு கிடத்தல்

மூலை முடங்கியிற் போய் உறங்குதல்

மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தல்

மூலையிலும் முடுக்கிலும் படுத்துக் கிடப்போர்

மூழ்கித் திளைத்தல்

மூழ்கி முக்குளித்தல் - நீண்ட நேரம் மூழ்கியிருத்தல்;

மண் எடுத்தல்

மூளியுங் காளியுமாய்க் கிடக்கும் ஆயுதங்கள்

மூளியும் மூக்கரையுமான பாடம் (நாமக்கல் கவி)

மெத்தப் படித்த மேதாவி

மெய்த்திரு வந்துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும்

ஒத்திருக்கும் உள்ளத்துரவோன் (நள 1-5)

மெய் புகுவன்ன கைகவர் முயக்கம் (அகம் 305)

மெய்ம்மறந்து பரவசமாய் விடல்

மெய்யறிவும் மெய்யுணர்வும் உடையோர்

மெய்யுருகிக் கண்ணுருகி நெஞ்சுருகி வெயில் வெண்

ணெய்ப் பாவைபோல் மெலிதல் (சிந் 686)

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழித்

தல்; திணறுதல்

மெல்லெனச் செல்லுதல்

மென்மொழி நவின்று நன்னயஞ் செய்தல்

மேடென்றும் பள்ளமென்றும் பாராது வழி நடந்து

செல்லல்

மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்குதல்