பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

வாய்மையும் தூய்மையும் மறுவில் சீலமும் உடையவர்

வாய்மையும் நாணயமும் பொருந்தியவர்

வாயளப்பும் வம்பளப்பும் செய்தல்

வாயாரப் புகழ்ந்து வாழ்த்தல்

வாயார வாழ்த்தி மகிழ்தல்

வாயார வாழ்த்தி வணங்கல் (கு. ராஜவேலு )

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளல்

வாயும் வயிறுமாய் இருப்பவள் - கர்ப்பிணி

வாயுவேகம் மனோவேகமாக ஓடுதல் (பிரதாப. அதி.22)

வாயை ஒடுக்கி வயிற்றை ஒடுக்கிப் பணம் சேர்த்தல்

வாரி இறைத்தல்

வாரி வகிர்ந்து உச்சி எடுத்தல்

வாரி வழங்கும் வள்ளல்

வாரி வழித்துக் கொண்டு ஓடல்

வாரி வழித்துக் கொண்டு ஓடுதல் ; ஏகுதல்

வாரி வாரி வழங்கும் வள்ளல்

வாழ்த்தி நல்வரவு கூறி வணக்கத்தைக் கூறி (பாரதிதா)

வாழ்த்தி வணங்குதல்

வாழ்த்தி வந்தித்தல் (கோவை 178)

வாழ்த்தி வரவேற்புக் கொடுத்தல்

வாழ்த்தும் வணக்கமும் கூறுதல்

வாழ் நாளை வீழ்நாளாகக் கழித்தல்

வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம் (சுந்)

வாழ்விலும் தாழ்விலும் இயல்பு குன்றாதவர் ; நிலை

மாறாதவர்

வாழ்விலும் தாழ்விலும் பிரியாத தம்பதிகள்

வாழ்வுமில்லை வகையுமில்லை (அண்ணா)