அமைதியும் அடக்கமும் உடைய
அமைதியும் ஆழமும் நிறைந்த இசைவளம்
அமைதியும் சாந்தமும்
அமைதியும் சுபிட்சமும் நிலவுதல்
அமைவடக்கம்- பணிவடக்கம்
அயர்ச்சியின்றி முயற்சி செய்தல் அயற்ச்சி- தளர்ச்சி,
அயர்வு சோர்வின்றி உழைத்தல்
அயரா அன்பினில் அரன் கழல் சேரும் ஆன்மகோடிகள் (ஜி. சுப். பிள்ளை )
அயோக்கிய மோசக்காரத் திருட்டுப் பயல்கள் (கல்கி)
அர்த்தமற்ற குருட்டு நம்பிக்கை
அரட்டல் புரட்டல் முற்றிய நோயால் ஏற்படும் வலி
அரட்டி மிரட்டுதல்
அரட்டுப் புரட்டு - பொய்ப்புரட்டு, பித்தலாட்டம்
அரடையும் புரடையும் திரித்தல் (பே)- அரட்டும் புரட்டும் பேசல்
அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனம் (வில்லி 10-16)
அரதி மறதியாயிருத்தல் - ஞாபக மறதியாயிருத்தல்
அரதேசி பரதேசிகளுக்கு உணவளி
அரளை சரளை-பாதையிற் போடும் படுக்கைக் கற்கள் அரற்றி அழுதல்
அரனே பரனே என்று ஆண்டவனைத் துதித்து (காத்தவராயன் கதை)
அராட்டுப் பிராட்டு- போதியதும் போதாததுமானது (ஈடு. 3-7-3)
அரிசி தவசி விலையேறிவிடல்
அரிய பெரிய காரியங்களை ஆற்றுபவர்
அரிய பெரிய செயல்களைச் செய்பவர்
அரியர பிரமாதிகளாலும் முடியாத காரியம்