பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

வீங்கு பெருஞ்சிறப்பின் ஓங்கு புகழோன் (பதிற்றுப் 90)

வீசி எறிதல்

வீட்டிலும் நாட்டிலும் பேசும் மொழி

வீட்டிலும் வெளியிலும் பேசும் மொழி

வீடுங் குடித்தனமுமாய் இருத்தி வைத்தல்

வீடும் விளக்குமாய் இருத்தல் நல்லது

வீடுவாசல் மனைவி மக்களைத் துறத்தல்

வீடு வாசல் மாடு மனை இல்லாதவர்

வீண் ஆரவாரமும் வெறும் பகட்டும்

வீணான வெறுஞ் சடங்கு (மறைமலை)

வீம்பும் வீறாப்பும் உள்ளவன்(ள்)

வீயா விழுப் புகழ் (அகம் 135)

வீரசூரமாய்ப் பேசுதல்

வீரதீரச் செயல்கள்

வீரதீரம் பொருந்தியவன்

(எவ்வளவு) வீரம்! தீரம்! கெம்பீரம்! (அண்ணா)

வீரமும் தீரமும்

வீரமும் வலிமையும் விரகும் நிறைந்தவர் (வில்லி 21-

78)

வீராதி வீரர்கள்

வீராதி வீரரும் சூராதி சூரருமான (கல்கி)

வீராதி வீரன்! சூராதி சூரன்!

வீறிட்டு அலறுதல்

வீறுசால் ஏறென விளங்குதல்

வீறு தோன்ற ஏறு நடை போடுதல்

வெங்கொடிய பாதகர்

வெங்கதிரோன் செங்கதிர் பரப்பி எழுதல்

வெட்கத்தாலும் வேதனையாலும் மனம் புழுங்குதல்

வெட்கத்தோடும் வேதனையோடும் கூறுதல்