உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

வெறுப்பும் கோபமும் விளைவித்தல்

வெறுப்பும் சலிப்பும் அடைதல்

வெறுப்பும் வேதனையும் அடைதல்

வெறுமையாய்ச் சூனியமாய் வெறிச்சென்றிருந்தது -

(இடம்) (கல்கி)

வேகமும் விறுவிறுப்பும்

வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் சொல்லுதல்

(கல்கி - அமர )

வேடிக்கையான ஆனால் வேதனையான பேச்சு

வேடிக்கை விநோதங்களைப் பார்த்தல்

வேடிக்கை விநோதமாகப் பேசல்

வேடிக்கை விளையாட்டுகள்

வேண்டா வெறுப்பாய்க் கொடுத்தல்

வேண்டா வெறுப்புடன் செய்தல் - விருப்பமின்றிச்

செய்தல்

வேத சாஸ்திர விற்பன்னர்

வேதாகம புராணேதிகாசங்கள்

வேதாந்த நாதாந்த யோகாந்த சித்தாந்த நெறி

யுணர்ந்தோர்

வேர்க்க விறுவிறுக்க வேலை செய்தல்; ஓடி வரல்

வேர்த்தாள்; உலந்தாள் ; விம்மினாள்; விழுந்தாள்; அழு

தாள்; வெய்துயிர்த்தாள் (கம்ப 5-12-121)

வேர்த்துப் பூத்து ஓடி வருதல்

வேர்த்து விறுவிறுத்துப் போதல்; ஓடிவரல்

வேர்த்து வெதும்பி மெலிந்து சோர்தல் (கம்ப)

வேரும் தூரும் கறையான் அரித்துவிட்டது

வேரைப் பறித்து வெந்நீரில் விடுதல் - அடியோடு

அழித்தல்

வேலை ஏதுமின்றி வீண்பொழுது போக்கல்