பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161


ஊதாரித்தனம் - பண விரயம்
எண் - மனம், கருத்து
எத்தன் - ஏமாற்றுபவன்
எழில் - அழகு
எள்ளல் - இகழ்தல்
ஏச்சு - இகழ்ச்சி
ஏமாளி - எளிதில் ஏமாற்றப்
ஏமுறு - துன்பமுடைய
ஏழ்மை - வறுமை
ஏற்றம் - உயர்வு; உயர்ச்சி
கல்லி - தோண்டி
ஏறுக்குமாறு பேசுதல் - ஏட்டிக்குப் போட்டி பேசுதல்
ஐது-மென்மை
ஓசிந்து - தளர்ந்து
ஒட்பம் - தெளிவு, ஒளி
ஒண்ணுதல் - ஒள்ளிய நுதல்
ஒல்கா - குறையாத
ஒல்கி - மெலிந்து
ஒழுக்குடை - ஒழுக்கமுடைய
ஒளிவின்றி - மறைவின்றி
ஒறுத்தல் - தண்டித்தல்
ஓய்ச்சல் - ஓய்ந்து போதல்
ஓர்ந்து - ஆராய்ந்து
கச்சிதமாக - சரியாக
கட்கின் - கண்ணுக்கு இனிமையான
கட்டங் கறுப்பான மிகக்
கடாக்கறிறு-மதம்பொழியும் யானை
கடாம் - மதம்
கடிகொள் காவனம்- மணம் நிறைந்த பூங்கா [ழகு
கண்கொள்ளாக் கவின் - பேர
கண்டு - கற்கண்டு
கண்மாரி - கண்ணீர்ப்பெருக்கு
கணக்காக - ஒழுங்காக
கத்தன்-தலைவன்
கதழ்-ஒலிகப்பு-கவை
கபோதி - குருடன்
கர்ண பரம்பரை - செவிவழிச் செய்தி
கரடம் - (யானையின்) கபோலம்
கரணம் - கருவி
கரிசனமாய் - அக்கறையாய்
கருமாந்தரம் - இறந்தோர்க்குச் செய்யும் சடங்கு
கல்லி - தோண்டி
கலாட்டா - குழப்பம்
கலிங்கம் - ஆடை
களித்தல்-தழைத்தல்
கலுழ்தல் - சிந்துதல்
கலுழி - காட்டு வெள்ளம்
கவர் - கிள
கவின்- அழகு
கழறுதல் - சொல்லுதல்
கழுக்காணி-அடங்காப்பிடாரி
கள்ளம் - கபடம்
களத்திரம் - மனைவி
கற்பகம் - கற்பகமரம்
கற்றா - கன்றையுடைய பசு
கன்மனம் - இளகாத மனம்
கன்றுதல் - மெலிவுறுதல்
கன்னம் வைத்தல் - கன்னக் கோலால் சுவரைக் குடைந்து திருடிச் செல்லுதல்
கன்னல் - கரும்பு
கன்னி - கன்னிமை; திருமண மாகாதவள்
கன தனவான்கள் - பெருஞ்செல்வர்கள்
காய்தல் - வெறுத்தல்
கார்புரை - மேகத்தை ஒத்த
காரிகை - பெண்
காரிருள் - கரிய இருள்
காவனம்-பூங்கா
கிஞ்சுக வாய் - சிவந்த வாய்