அருட்குணமுடைய ஆன்றோர்
அருந்தகைமையும் ஆற்றலும் பெற்றவர்
அருந்தல் பொருந்தல்களில் அளவு மீறக்கூடாது
அருந்துயர் அவலந் தீர்க்கும் மருந்து (நற் 140)
அருந்துயர் ஆரஞர்
அருப்புத்துருப்பு-அருமை, அருந்தோட்டம்.
அரும்படரெவ்வம் (குறுந் 360)
அரும்பயன் ஆயும் அறிவினார் (குறள் 198)
அரும்பெறல் கல்வியால் பெரும்பயன் பெற்றவர்
அருமை பெருமைகள் அறியாதவர்
அருமையும் அழகும் வாய்ந்த
அருவுருவாகிய ஆண்டவன்
அருவென்ன உருவென்ன அன்றென்ன நின்றவன் இறைவன் (குமர 415)
அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்து பிரியாதவர்-(சிவன்) - (ச. 136-3)
அருள்புரி நெஞ்சத்து அறவோர் (மணி 20-6)
அருள் பொழி திருவிழி - அருள் பொழியும் அழகிய திருக்கண்கள்
அருள்வலி ஆண்மைக் கல்வி அழகு அறிவு இளமை ஊக்கம் புகழ் உடையவ (சிந். 1172)
அருளும் அன்பும் உடையோர்
அருளும் ஆசியும் அருளுதல்
அரைகுலையத் தலை குலைய ஓடுதல் மிக விரைவாய் ஓடுதல்.
அரைகுறையாய் நிறுத்திவிடல்
அரையுங் குறையுமாகச் செய்தல் - அரை குறையாகச் செய்தல்
அரைவயிறு குறைவயிறாக உண்ணுதல்