பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163

தண் உலாம் மழலை - குளிர்ச்சி (இனிமை) நிறைந்த மழலைச் சொல்
தண்டோராப் போடுதல்- தமுக்கடித்தல்
தண்ணொளி - குளிர்ந்த ஒளி
தப்பட்டை - ஒருவகைப் பறை
தவர் -தவத்தினர்
தள்ளாட்டம் - தடுமாறுதல்
தளுக்குதல் பகட்டுச் செய்தல்
தனு - உடல்
தாம்பூலம் - வெற்றிலை பாக்கு
திக்கற்ற - ஆதரவற்ற
தடுமாறல், மயங்குதல்
திகில் - கிலி
திகை திகைத்தல் - மிகத் திகைத்தல்
திடல் - திடர், மேடு
திண்டாடுதல் - தவித்தல்
திரு - செல்வம்; இலக்குமி
தீங்கதிர் மதி - இனிய கிரணத்தையுடைய திங்கள்
தீம் பாடல் - இனிய பாடல்
தீவிய - இனிய
துச்சமாக மதி-அற்பமாக மதி
துடுக்கு - துடிப்பு, குறும்புத் தனம்
தும்பு துரும்புகள் - தூசிகள்
துரிதமாக - விரைவாக
துவர் வாய் - பவளம்போன்ற வாய்
துவேஷம் - வெறுப்பு
துறு துறுப்பு - துடிப்பு, சுறு சுறுப்பு
தூர்த்தர் - ஒழுக்கமில்லாதவர்
தெம்பு - உற்சாகம்
தெவிட்டாத - சலிப்புத் தராத
தெள்ளிய - தெளிந்த
தேசு - ஒளிதேம்பல் - அழுது தேம்புதல்
தே மேவும்- இனிமை பொருந்திய
தேற்றம் - உறுதி; நிச்சயம்
தேறல் - கள், மது
தொடை நலம் எதுகை,மோனை முதலிய தொடைச் சிறப்பு
தொண்டை - ஆதொண்டைக் கனி (சிவப்பானது)
தொந்தம் - பாசம்
தொப்பை - தொந்தி
தொன்று தொட்டு - பண்டு தொட்டு; பழங்காலம் முதல்
நகில் - (பெண்களின்) மார்பு
நசை - விருப்பம்
நண்பு - நட்பு
நயத்தக்க - விரும்பத்தக்க
நயந்தழைத்தல் - விரும்பி
நயம்புரி - இனிமை பொருந்திய; நன்மை பொருந்திய
நயவர் - விரும்பத்தக்கவர்
நல்லிசை - நல்ல புகழ்
நலிவு - நலிந்து போதல்
நறுவிசு - தூய்மை, துப்புரவு
நாஞ்சில் - கலப்பை
நாண் - நாணம்
நாரிமணி - பெண்மணி
நாஸ்திகர் - கடவுள் இல்லை என்போர், நாத்திகர்
நிதானம் - பொறமை
நிமலன் - குற்றமில்லாதவன்
நிமிண்டுதல் - கிள்ளுதல்
நித்தன் - அழிவில்லாதவன்
நிரந்தரம் - எப்போதும்
நிலை குலைதல் - நிலையினின்றும் இழிதல்
நிறை - கற்பு