பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

புதுக்கடி - புது மணம்
புரையா - ஒப்பில்லாத
புலன ழுக்கு - மனமாசு
புலை - புலால் (உண்ணல்)
புவன் போகங்கள் - உலக இன்பங்கள்
புளகாங்கிதம் - மயிர்க்கூச் செறிதல்
புளகித்தல் - மயிர்ப் புளகம் ஏற்படல் ; மயிர்க்கூச் செறிதல்
புற்புதம் - நீர்க்குமிழி
புறந்தருதல் - காப்பாற்றுதல்
புன் மூரல் - புன்னகை
புனைசுருட்டு - பொய்ப்புனைவுரை
பூதானம் - பூமிதானம்
பூர்ண சந்திர விம்மம் - முழு நிலவின் உருவம்
பூரிப்பு - மனக்களிப்பு
பூஷணாதிகள் - ஆபரணம் முதலியன
பெருங்கை - துதிக்கை
பேதம் - வேறுபாடு
பேதலித்தல் - வேறு படல்
பேதுறுதல் - மயங்குதல்
பேதை - ஏழு வயது வரையுள்ள பெண் பிள்ளை
பேரா இயற்கை - மீளா இயற்கை
பேழை - பெட்டி
பைம்பூண் - பசிய ஆபரணம்
பொச்சரிப்பு - எரிச்சல்
பொட்டு - திலகம்
பொருந்தல் - உடலுறவு
பொருப்பு - மலை
பொலங்கொள் திண்தோள் -பொன் போன்ற (அழகிய) திண்ணிய தோள்
பொற்பு - அழகுபொற்றொடி -பொன் வளை யணிந்த பெண்
பொன்செய் கிண்கிணி - பொன்னால் செய்யப்பட்ட கிண் கிணி
பொன்னாடு - தேவலோகம்
போக்கிரி - துட்டன்
போட்டா போட்டி - ஏட்டிக்குப் போட்டி
போஜனம் - உணவு
மகத்துவம் - பெருமை
மட்டி - அறிவிலி
மடத்தகை - இளமைத்தன்மை
மடவமாந்தர் - அறிவிலிகள்
மடிவாய் நாஞ்சில் - மடித்த வாயினையுடைய கலப்பை
மடு - சிறு நீர் நிலை
மண்டலம் - மண்ணுலகு
மதுரக்கனி-இனிமையான கனி
மம்மர் - மயக்கம்
மலபரிபாகம் - ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல
மும் நீங்கியிருத்தல்
மலருண்கண் - மலர்போன்ற மை தீட்டிய கண்
மனையறம் - இல்லறம்
மாட்சி - மாண்பு, சிறப்பு
மாண் - மாட்சி
மாயிரு ஞாலம் - மிகப்பெரிய உலகம்
மார் - மார்பு
மாழ்கி - மயங்கி
மாழ்குதல்- மயங்குதல்
மிடல் - வலிமை
மிதமிஞ்சிய-அளவுக்குமிஞ்சிய
மிரட்சி - மிரண்டு போதல்
மிரட்டுதல் - வெருட்டுதல்
மிளிர் நீறு - விளங்கும் திருநீறா
முகிழ் - (தாமரை) மொட்டு