பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

அரைவயிறுங் குறைவயிறுமாய்க் காலங் கழித்தல்

அரோக திடகாத்திரம்

அல்லல் அரும்படர் (நற் 307)

அல்லல் உழந்து அலமந்து ஆக்கை நிலை தளர்ந்தார்.- (இரட்ச 21-315)

அல்ப சொல்பமான காரியம் அல்ல

அல்லலும் தொல்லையும் அளவிலாது எய்துதல்; எல்லையிலாது எய்துதல்

அல்லலுற்று அழுங்குதல்-(சிந் 258; நைட 849)

அல்லறை சில்லறை மீதி, மிச்சத்தொகை அல்லற்பட்டு ஆற்றாது அழுதல் (குறள் 555)

அல்லும் பகலும் அயராதுழைத்தல்

அல்லும் பகலும் அனவரதமும்

அல்லுச் சில்லுப்படுதல்- குலைதல்; சின்னா பின்னப்படுதல்

அல்லுஞ் சில்லுமாய்ப் பணம் கரைந்துவிடல் - சிறுசிறு தொகையாய்க் கரைந்துவிடல்

அல்லை தொல்லைகள் தீர்த்தல்

அல்லோல கல்லோலம் - ஆரவாரம், பேரொலி

அலங்க மலங்க - பொறிகலங்க

அலசி ஆராய்ந்து முடிவு காணல்

அலட்சியமாகவும் வெறுப்பாகவும் பேசுதல் - கல்கி

அலதி குலதி-அலங்கோலம்

அலந்தார்க்கும் அற்றார்க்கும் அருள் செய்யும் ஆண்டவன்

அலந்து உழல்தல்- (அகம் 45)

அலம்பலும் அலசடியும்படல் (அலசடி- துன்பம்)

அலர்ந்த செந்தாமரைபோல் அகம்மிகக் குளிர்தல்--- (பஞ்ச-வனவாசம் 2)