அலறி உலறி ஆவி சோர்ந்து நிற்றல் (திருவா. 5-22)
அலறிக் கலங்கிடல்
அலறிப் புடைத்துக்கொண்டு ஓடுதல்
அலறி வாய்குழறி நொந்து அழுதல் (வில்லி. 27-253)
அலுக்காமல் சலிக்காமல்
அலுக்கிக் குலுக்கிக் கொண்டுவரல்
அலுக்கிக் குலுக்கிக் கொண்டு நடக்கும் தலுக்குக்காரி
அலுங்காமல் அசையாமல்
அலுங்காமல் நலுங்காமல் வண்டியில் செல்லல்
அலுங்கிக் குலுங்கிப் போதல்
அலுத்துக் களைத்துப் போதல்
அலுத்துச் சலித்துப் போதல்
அலுத்துப் புலுத்து வந்தவன்
அலுப்பு சலிப்பாயிருத்தல்-களைத் திருத்தல்
அலுப்பும் ஆயாசமும் (தீர)
அலுப்போ சலிப்போ கொள்ளாதவர்
அலைகுலையத் தலைகுலைய ஓடுதல் -(காத்தவராயன் கதை ப-58)
அலைகுலையாக்குதல் - நிலைகுலையச் செய்தல்
அலைத்துக் குலைத்துக் கெடுத்துவிடல்
அலைத்து வருத்துதல் - அலைக்கழித்தல்
அலைந்து உலைந்து அழிதல்-(திருப்பு 322)
அலைந்து உலைந்து நலிந்து துயருறல்
அலைந்து திரிந்து உழல்தல்
அலைமோதி அலைக்கழிக்கும், மனத்துள் சிந்தனைகள்
அலைவாய்த் துரும்புபோல் உழல்தல் (உண்ணா . பதி-2)
அவசரப்படாமலும் ஆத்திரப் படாமலும் காரியம் செய்தல்
அவசரமும் பரபரப்பும் கொண்டிருத்தல்