பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

அழுகையும் ஆத்திரமும் பீறிட்டுக் கொண்டுவரல்; பீறிக்கொண்டு வரல்

அழுகையும் கண்ணீருமாயிருத்தல்

அழுங்கிப் புழுங்கிச் சாதல்- பொறாமையால் புழுங்குதல்

அழுத்தந் திருத்தமாக வலியுறுத்திச் சொல்லுதல்; பேசுதல்

அழுத்தந் திருத்தமாகவும் ஆணித்தரமாகவும் கூறல்

அழுத கண்ணீரும் தொழுத கையுமாக இருந்தாள்

அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்க் கலங்கி நிற்றல்; வருந்தி நிற்றல்

அழுது அரற்றுதல்

அழுது தொழுது வழிபடல்

அழுது புலம்பி அலமருதல்

அழுதும் அரற்றியும் அலறியும் உலறியும் (கண்ணீ ரைப் பெருக்கல்)

அழுதும் அரற்றியும் புலம்புதல்

அழுது தொழுது பெற்றுவிடல்

அழுது நைந்து உருகுதல் (சிந் 1393)

அழுது வடியும் முகம்

அழுந்திக் கிடந்து உழலும்

அழையா வீட்டிற்கு நுழையா விருந்தாளி

அள்ளித் துள்ளுதல் - மிகச் செருக்குதல்

அவிழ்த்து நெகிழ்த்தல்

அள்ள அள்ள எடுக்க எடுக்கக் குறையாத

அள்ள அள்ளக் குறையாத ஆனந்தத் தெள்ளமுதம் -(செந். மு. சந் 34-4)

அள்ளாடித் தள்ளாடி நடத்தல் - நடை தளர்ந்து, மயங்கி நடத்தல்

அள்ளி அணைத்தல்

அள்ளித் துள்ளுதல் - கர்வங் கொள்ளுதல்