பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18

அன்னமிட்டவரைக் கன்னமிட எண்ணுதல் - இரண் டகம் செய்யக் கருதுதல்

அன்னமும் சொன்னமும் தானம் செய்தல்

அன்ன மென்னடை அணங்கு

அன்னாகாரம் இன்றிப் பட்டினி கிடத்தல்

அனுபவமும் திறமையும் உள்ள வைத்தியர்

அஸ்திர சஸ்திரங்களுடன் போரிடல்

ஆக்கவும் அழிக்கவும் வல்லவர்

ஆக்கமும் ஊக்கமும் அளித்தல்

ஆக்கமும் கேடும் அனைவர்க்கும் உண்டு

ஆக்கவும் காக்கவும் அறிவாயா?

ஆக்கி அரித்துப் போடும் அகத்தரசி

ஆகாசக் கோட்டைகளும் மனோராஜ்ய மாளிகை களும் இடிந்து தகர்ந்து பொடிப்பொடியாகிக் காற்றிலே பறந்து மண்ணிலே விழுந்து மண்ணோடு மண்ணாகி மறைந்து தொலைந்து போதல் (கல்கி -அலை)

ஆச்சரியமும் ஆனந்தமும் அடைதல்

ஆச்சி பூச்சி விளையாடுதல்- கண்ணாம்பூச்சி விளையாடுதல்

ஆசாபாசங்களை அறவே அறுத்தெறிந்துவிடல்

ஆசாபாசத்தோடு அணைத்து முத்தமிடல்

ஆசாபாசம் - பந்தபாசம்

ஆசார அனுட்டானங்கள்

ஆசார உபசாரம் செய்தல்

ஆசார ஒழுக்கம்

ஆசார உபசாரம் செய்தல்,

ஆசாரோபசாரம் செய்தல்

ஆசை அன்பு இல்லாதவன்

ஆசைக்கு மோசம் இல்லை (பழ)

ஆசைகாட்டி மோசம் செய்தல்