பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19

ஆசையும் அன்பும்

ஆசையும் பாசமும் அதிகமாய்க் காட்டுபவர்

ஆசையும் பாசமும் அன்பும் உடையவர் (அறநெறிச் 113)

ஆசையோடு பெற்றெடுத்து அருமையாக வளர்த்தல் (வளர்த்த பிள்ளை)

ஆட்டம் பாட்டம் அபாரம்!

ஆட்டி அசைத்துப் பார்த்தல் (காதை)

ஆட்டி அலைத்து நடந்து வருதல்

ஆட்டியலைத்தல் - மிக வருத்துதல்

ஆட்டும் பாட்டுமாயிருக்கும் வீடு

ஆடகத்து இயன்ற சூடகம் - பொன்வளை (குமர 582-12)

ஆடகப் பசும்பொன் பாடகச் சீறடி நாடக மகளிர் (தணி-ஆற் 330)

ஆடம்பரமாகவும் படாடோபமாகவும் செய்தல்

ஆடம்பரமோ டாம்பீகமோ இல்லாமல்

ஆடல் பாடல் கண்டும் கேட்டும் களித்தல்

ஆடலும் பாடலும் வல்ல மகளிர்

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுதல்

ஆடாமல் அசையாமல் அப்படியே நிற்றல்

ஆடி அசைந்து நடந்து வரல்

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் தொழுதல் (திருவா 4-62)

ஆடி ஓடி அலைந்து திரிதல்

ஆடிப் பாடி அகமகிழ்தல் ; பரவசமாயிருத்தல்

ஆடிப்பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர் (சுந் 5-5)

ஆடியும் பாடியும் அரற்றியும் பிதற்றியும் அரனைத் தொழுதல்