பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் ஆண்டவனைத் தேடுதல்

ஆடியும் பாடியும் மகிழ்தல்

ஆடு மாடுகள் - கன்று காலிகள், கால் நடைகள்

ஆடை அணிகலன்கள் பூண்ட

ஆடை அணிகள் பூண்டு கொள்ளல்

ஆடை அலங்காரம்

ஆடை ஆபரணங்கள்

ஆடைக்குங் கோடைக்கும் (- எல்லாப் பருவத்துக்கும்) உரிய ஆடை ; வற்றாத கிணறு

ஆடை யணி அலங்காரங்கள்

ஆண் சிங்கம்போல் ஆண்மையுடையவன்

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண் டார் வருவாரோ?

ஆண்டான் அடிமை என்ற வேறுபாடின்றி

ஆண்டிப் பரதேசி (கல்கி)

ஆண்டு அனுபவித்தல்

ஆண்மையும் அறிவும் ஊக்கமும் உறுதியும் பெற்றவர்

ஆணவமும் அகந்தையும் (அகங்காரமும்) உடைய

ஆணவமும் அட்டகாசமும் கொண்ட சொற்களை வீசுதல் (அண்ணா )

ஆணவமும் இறுமாப்பும் அதிகமாய் விடல்

ஆணையிட்டுச் சூளுறவு செய்தல்

ஆத்திர அவசரத்திற்காகப் பணம் ஒதுக்கி வைத்திருத்தல் (நாடோடி)

ஆத்திரப்பட்டு அவசரப்பட்டுப் பயனில்லை

ஆத்திரமும் அவசரமும் அடைதல்

ஆத்திரமும் அழுகையுமாய்ப் பேசல் (கல்கி - அலை )

ஆத்திரமும் ஆவேசமும் அடைதல்