ஆர்வமும் அக்கறையும் காட்டுதல்
ஆர்வமும் ஆவலும் உடையவர்
ஆர்வமும் உற்சாகமும் உள்ளவர்
ஆர்வமும் ஊக்கமும் அசையா உள்ளமும் கொண்டு உழைத்தல்
ஆர்வமும் ஊக்கமும் காட்டுதல்
ஆர அமர ஆலோசித்துத் தீர முடிவு செய்தல்
ஆர அமர ஆராய்தல் ; சிந்தித்தல் ; ஆலோசித்துப் பார்த்தல்
ஆர அமர யோசித்து முடிவு செய்தல் (கல்கி)
ஆர தீர யோசித்தல்
ஆரந்தாழ்ந்த அணிகிளர் மார்பு (புறம் 59)
ஆரமும் அகிலும் நாறும் அருவியும் சுனையும் (வில்லி 12-2)
ஆரவார ஆடம்பர முறைகளின்றிச் செயல் செய்தல்
ஆரவாரத்துடனே ஆர்ப்பரித்துக் கொக்கரித்து (இராமப். அம் 14)
ஆரவாரமின்றி அமைதியாகச் செய்தல்
ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் செய்யும்
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்து அடிபணிதல் (வராகிமாலை 2)
ஆராமை சோராமையாயிருத்தல் - மிகக் களைப்பா யிருத்தல்
ஆராய்ந்து உணர்ந்து பேசுதல்
ஆராய்ந்து தெளிதல்
ஆருமற்ற அத்தவனக் காடு
ஆருயிரே செல்வமே அமுதே யருங்கிளியே என்று அழுது புலம்பல் ; கொஞ்சுதல்
ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில் போல் எந்நாளும் முசியாமல் வாழ்ந்திடுவீர் (பஞ்ச வனவாசம் 4)