பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

ஆளும் தேளும் அற்ற இடம்

ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு (நெடு நல் 30; நற் 200)

ஆறுதலும் தேறுதலும் கூறுதல்

ஆன்றமைந்த கேள்வியுடை அறிஞர்

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் (புறம் 191)

ஆன்றோரும் சான்றோரும் அமர்ந்திருக்கும் அவை; நிறைந்த நாடு

ஆனந்தமும் களிப்பும் அடைதல்

ஆனைக்கும் பூனைக்கும் உள்ள தூரம்

ஆனை சேனை - மிகுதி

ஆஸ்தி பாஸ்தி ஒன்றுமில்லாதவன்

இக்குப் பிக்கு - இசகு பிசகு, ஏறுமாறு, தாறுமாறு

இகபர இன்பங்கள் எய்துதல்

இகபரம் இரண்டிலும் இன்பம் எய்தல்

இகழ்ச்சியும் இழிவும் எய்துதல்

இகழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் பொருட்படுத்தாத

இகழ்ந்து எள்ளுதல் ; புறக்கணித்தல்

இகழ்புகழ் இரண்டையும் சமமாக மதித்தல்

இசக்குப் பிசக்காய் நடத்தல்

இசகுபிசகாய்ப் பேசுதல் ; ஏதாவது செய்துவிடல் ; நடத்தல் ; மாட்டிக் கொள்ளல்

இசையும் வசையும் பொருட்படுத்தாமல் இருத்தல்

இசையோர்த்தன்ன இன் தீங் கிளவி (அகம் 212)

இசைவாகவும் இனிமையாகவும் பேசுதல் (மறைமலை)

இட்டது சட்டம் வைத்தது வரிசை

இட்டலிடைஞ்சல் - இடையூறு, தரித்திரம், துன்பம் டக்கு மடக்கான பேச்சு