பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

இதயமில்லையா இரக்கமில்லையா

இதய மோடு இறுகுறத்தழுவுதல் (வில்லி 1-107)

இந்திரன் சந்திரன் என்று ஏத்திப் புகழ்தல்

இந்திரன் சந்திரன் தேவேந்திரன் என்று புகழ்தல்

இந்துவர எழுந்த சிந்து என மகிழ்தல் (வில்லி 34-24)

இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயப்பது

இமிழ் கடல் வேலித் தமிழகம்

இயலும் செயலும் ஒத்திருக்கும்

இயன்றவரை முயன்று பார்த்தல்

இயைபும் பொருத்தமுமில்லாத

இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர் (கம்ப 3-3-12)

இரக்கமில்லையா இதயமில்லையா

இரவலர் இல்லையேல் புரவலர் இல்லை

இரவென்றும் பகலென்றும் பாராது வேலையில் ஈடு படல்

இரவும் எல்லையும் (அகம் 313)

இரவுபகல் எந்த நேரமும் ; நேரத்திலும்

இருசெவிக்கு இனியது இளங்கு தலையர் இன்சொல் (வில்லி 16-56)

இருட்டு வீட்டில் குருட்டுக் காக்காய் ஓட்டுதல்

இருண்டு சுருண்ட மயிர்

இருதயத்தின் அடிப்பும் துடிப்பும் (கல்கி)

இருந்த இடம் தெரியாமல் மறைந்தொழிதல் ; பறந்து போதல்

இருந்தும், கிடந்தும், நடந்தும் இறைவனை நினைந்திருப்பார் (அடியார்)

இருபகட்டொரு சகடு