பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28

இழுப்புப் பறிப்புப்படல் - அவதிப்படல், தொந்தரவு படல், துன்பப்படல்

இழுப்பும் பறிப்புமாய்க் கிடத்தல்

இழுமென் மொழித்தெளி தமிழ் (குமர 440)

இழுமென இழிதரும் அருவி (முருகாற்றுப் 316; புறம் 399

இழுமெனும் ஓசையின் ஒழுகுறும் அருவி

இழுமெனும் ஓசையுடைய மதுரத் தமிழ் மொழி (கல்கி)

இழை மருங்கு அறியா நுழை நூற்கலிங்கம் (மலைபடு 561)

இழையத் தீட்டிக் குழைய வடித்தல்

இளகி உருகும் இதயம்

இளநிலவு எறிக்குங் குளிர்மதிக் குழவி (குமர 829)

இளகிய இதயமும் இன்சொல்லுமுடையவர்

இளப்ப சளப்பமாக எண்ணுதல்

இளமையும் எழில் வனப்பும் உடையவர்

இளமையும் எழிலும் காதலும் உடையவர்

இளமையும் யாக்கையும் வளமையும் நிலையா (தமிழ்ப்பா 371-32)

இளமையும் வளமையும் உடைய மாணவர்கள்

இளமை யெழில் கொழிக்கும் அழகி

இளைத்துக் களைத்தல் (வீர வி 6-82)

இளைத்து மெலிந்திருத்தல்

இளைப்பினாலும் களைப்பினாலும் சோர்வுற்றிருத்தல்

இளைப்பு சளைப்புக் கொள்ளாதவன்

இற்றிடை மெலியச் செம்மாந்து எழுநகில் (நைட 832)

இற்றைக்குச் சற்றேறக்குறைய - ஆண்டுகட்கு முன்பு

இறக்கை கட்டிப் பறத்தல்

இறாட்டுப் பிராட்டு - சண்டை சச்சரவு