பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29

இறைஞ்சி ஏத்துதல்

இறைவன் திருவருள் துணை கொண்டு செய்தல்

இறுகிக் கெட்டியான

இறுதிவரினும் உறுதி கூறும் அமைச்சர்

இன் அமிழ்தின் கன்னல் பாகின் கோற்றேனின் கனியின் கனிந்தமொழி (நைட 25)

இன்களி மகிழ் நகை (புறம் 71)

இன்கனி மழலைச் செவ்வாய்ப் புத்திரன் (காசி காண்டம்)

இன் சொல்லே கூறி இதமே செய்பவன்

இன்பத்தை அனுபவிக்கும் இளமைப்பருவம் (மனு முறை)

இன்பதுன்பம் - சுகதுக்கம்

இன்புறு நன்மொழி கூறுதல்

இன் முகமும் புன்னகையும் பூத்து வரவேற்றல்

இன்னல்களும் இடையூறுகளும்

இன்னலும் இடுக்கணும் (எண்ணில வரினும்)

இன்னா அரும்படர் (நெடுநல் 167)

இன்னார் இனியர் என்று பாராமல்

இன்னார் இனியார் என்று எண்ணாமல் (திவ் 571)

இன்னிசைத் தீம்பாடல்கள்

இன்று நேற்றுத் தோன்றிய தன்று, என்றென்றும் இருந்து வருவது

இனஞ்சனங்களுக்கு உதவுதல் (இனஞ்சனம் - சுற்றத்தார், உறவினர்)

இனத்தார் சனத்தார்களுக்கு உதவுதல்

இனஞ்சனமுமாயிருத்தல் - உற்றார் உறவினருடனிருத்தல்