பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30

இனாம்சனும் எதுவும் கொடுக்காதவன் (இனாம் சனாம் - சிறுகொடை)

இனித்துச் சுவைக்கும் பழம்

இனி நமக்கென்ன குறை என்று எண்ணி இறுமாப் படைதல்

இனிமையும் எளிமையும் உடைய (இலக்கிய) நடை

இனிய தெள்ளமுதினும் இனிக்குஞ் சுவைத் தமிழ் - (தியாகராசச் செட்டியார்)

இனைந்து நைந்து அழுது இரங்குதல் (வில்லி 20-259)

இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் (கலித் 142)

இஷ்டா நிஷ்டம் - விருப்பு வெறுப்பு

ஈகையிரக்கம் இல்லாதவன்; உடையவன்

ஈடில்லாத பெருமையினைத் தேடியளித்தவர் - 'சொல்லின் செல்வர்;'-94 (நவநீத)

ஈடு இணையற்ற - ஒப்பற்ற

ஈடும் எடுப்பும் இல்லாதவர், அற்றவர் - ஒப்பில்லாதவர்

ஈடு செய்ய முடியாத இழப்பு

ஈடு சோடு இல்லாதவள் - இணை, பொருத்தம் இல்லாதவள்

ஈடு ஜோடியான - இணையான

ஈர்க்கிடை புகாமல் அடிபரந்தோங்கும் ஏரிளவன நகில் (நைட 621)

ஈர்ங்கை விதிராத இவறி (இவறி-உலோபி)

ஈரமும் அருளும் ஒழுக்கமும் சால்பும் இன்சொலும் இந் தி(ரி)யப் பகைவெல் வீரமும் அருள்க - (சோணா சல 48)

ஈயாத லோபி (கயிலாச சத)

ஈயெறும்புகள் மொய்த்தல்

ஈவிரக்கம் - தயவு தாட்சணியம்