பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32

உண்டுடுத்து உழல்வார் (சிவஞானபா - கலம் 9)

உண்டுடுத்து ஊரார் மதிக்க வாழ்தல்

உண்ணாமலும் உறங்காமலும் வேலையில் கண்ணாயிருத்தல்

உண்பதும் உறங்குவதும் தவிர ஒன்றும் செய்யாதவன்

உண்மைக்கு மாறானவை, நீதிக்குப் புறம்பானவை

உணர்ச்சிகளையும் உள்ளக் குமுறல்களையும் எடுத் துரைக்க முடியாது

உணர்ச்சியும் உயிர்த்துடிப்பும் நிறைந்த கவிதை

உணர்ச்சியும் எழுச்சியும் ஊக்கமும் கொண்ட

உணர்வும் ஒளியும் ஊக்கமும் உணர்ச்சியும் உடையவர் (பெருங்க 1-34-13)

உணர உணரும் உணர்வுடையார் (நாலடி 247) - பிறர் கருத்தைக் குறிப்பாலுணர்வார்

உணவும் உறையுளும்

உதட்டில் உறவும் உள்ளே பகையும் உடையவர்

உதட்டில் நகையும் (சிரிப்பும்) உள்ளத்தில் வஞ்சமும் உடையவர்

உதப்பிக் குதப்பிக்கொண்டு வெற்றிலை மெல்லுதல்

உதவியும் ஒத்துழைப்பும் நல்கல்

உந்தித்தள்ளுதல்

உப்பிற்குங் காடிக்குங் கூற்று (குறள்)

உப்புச் சப்பற்ற கதை

உப்புச்சப்பில்லாத பேச்சு

உபகாரம் செய்தோர்க்கு அபகாரம் செய்தல்

உயர்ந்தோங்கி நிற்றல்; வளர்தல்

உயர்வு தாழ்வு பாராட்டாதவர்

உயிர் ஒடுங்கி உடல் நடுங்கி வருந்துதல்

உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பு (அகம் 205)