பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

உருவத்தால் இருவராகி உள்ளத்தால் ஒருவராதல் (சூளா 1112)

உருவுக்கு எழில் மெருகு பூசிய பருவம்

உருவுந் திருவுங் குலமுங் குணமும் ஒத்த தம்பதிகள்

உருவும் அருவும்

உருவருவுமான இறைவன்

உருவும் இளமையும் ஒண்பொருளும் உடையவள்

உருவும் திருவும் ஒத்த காதலர்

உருவும் திருவும் பொருந்திய காதலர் ;மணமக்கள்

உரைகள் எல்லாம் உணர்வெய்தி நல்ல உத்தமராய் உணர்ந்தார் (ச.5-3)

உரையிறந்த உவகைப் பெருங்கடல் (இரட்ச 21-453)

உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல்

உலவாப் பெருங்குணத்து உத்தமன் - இறைவன் (கம்ப 3-2-29)

உலுக்கிக் குலுக்குதல்

உவகை தந்து ஊக்கம் அளித்தல்

உவகையும் உற்சாகமும் நிறைந்த உள்ளம்

உவந்து இன்புறல்

உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர் (கம்ப 4-14-15)

உவர்ப்பும் துவர்ப்பும் உடைய பதார்த்தங்கள்

உவரிசூழ் உலக வைப்பு (காஞ்சிப் 2-125)

உழுது பயிர் செய்யும் உழவர்

உழைத்து உழைத்து உடம்பு ஓடாய்ப் போதல்

உழைத்துக் களைத்தல்

உழைத்து உழைத்து உருக்குலைந்து போதல்

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

உழைப்புக்குத் தக்க ஊதியம் வேண்டும்

உள் மகிழ் உவகை (பெருங் 5-7-3)

உள்ளெலாம் உவந்து ஈயும் வள்ளியோர் (கம்ப 1-1-4)