பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37

ஊண் உடை சிறக்க வேண்டும்

ஊண் உறக்கம் இன்றி உழைத்தல்

ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும் (பழ)

ஊணும் உறக்கமும் இன்றி உயங்குதல்

ஊணுறக்கமின்றி அயராதுழைத்தல்

ஊதி உதித்துப் போதல்-உடல் மிகப் பருத்துப் போதல்

ஊதியமும் இழப்பும் வாணிகத்தில் சகஜம்

ஊர் பேர் தெரியாதவர்

ஊரார் உடைமைக்குப் பேராசை கொள்ளல்

ஊருக்கு உழைக்கும் உத்தமர்

ஊருக்குழைத்து ஊதாரியாய்ப் பிழைத்தல்

ஊரும் பேரும் கேட்டறிதல்

ஊழல்களும் ஊதாரித்தனங்களும் மலிந்த

ஊற்று மணல் போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிடல் (திருவா 437)

ஊற்று மணலென நெக்குநெக்கேங்கி உருகுநர் (கழுக்கோ 72)

ஊற்றெடுத்துப் பெருகுதல்

ஊறப்போட்டுத் தோய்த் தெடுத்தல்

ஊறித் திளைத்தல் ஊனமானமில்லாதவன் - உரோசம் மானமில்லாதவன்

ஊனும் உயிரும் உருகப் பாடுதல்

எக்கச் சக்கம் - இசகு பிசகு

எக்கச்சக்கமாக மாட்டிக் கொள்ளுதல்

எக்காளமும் ஏடாசியுமாய் (- பரிகாசமாய்)ப் பேசுதல்

எகனை மொகனை - எதுகை மோனை

எச்சசொச்சம் இல்லாமல் தீர்த்து விடுதல்

எச்சமிச்சம் ஏதாவது உண்டா