உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6


அண்மையில் உயர்திரு மா. சண்முகசுப்பிரமணியம், பி.ஏ.... பி.எல்., அவர்கள் 'அண்ணல் நேருவின் அமுதமொழிகள்' என்ற தம் நூலைக் கவிதைச் சுவை நனிசொட்டச் சொட்ட இயற்றியுள்ளதைப் பல அறிஞர்கள் பாராட்டியிருக்கின்றனர்.

உரைநடையைக் காட்டிலும் பேச்சுக்களிலும் சொற் பொழிவுகளிலும் அடுக்கு மொழிகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன. பதினைந்தாண்டுகளுக்கு முன்பு ஒருநாள் அடுக்கு மொழியில் பேசுபவர் அண்ணாதுரை ; அவர் பேச்சைக் கேட்கப் போ வோம்' என்று கூறிக்கொண்டு எங்கள் ஊராகிய திருச் செங்கோட்டு மக்களும், அதன் சுற்று வட்டாரத்திலுள்ள மக்களும் அவருடைய சொற்பொழிவைக் கேட்கப் பெருந்திரளாகக் கூடியதைக் கண்டேன். அடுக்குமொழிக்குத் தனியாற்றல் உண்டு என்பதை அவருடைய சொற்பொழிவைக் கேட்டு அன்றே உணர்ந்தேன். அண்மைக் காலங்களில் திருமதி சௌந்தரம் கைலாசம் அம்மையாரவர்கள் அடுக்குமொழிகள் நிறைந்த கவிதை நடையில் பல சொற்பொழிவுகள் ஆற்றியிருப்பு பதைக் கேட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். அடுக்கு மொழிகளை அள்ளிவீசிப் பேசுவதை ஒரு கலையாகக் கருதுகின் மனர் பலர். அடுக்கு மொழியில் பேசுவது அழகு என்று எல்லாக் கட்சிச் சொற்பொழிவாளர்களும் உணர்ந்திருக்கின்றனர்; அடுக்கு மொழிகளில் பேசப் பெருமுயற்சி செய்தும் வருகின்றனர்.

உரைநடைக்கும் கவிதைக்கும் காந்தசக்தியையும் கவர்ச் சியையும் ஊட்டக்கூடிய அடுக்கு மொழிகளைத் தொகுக்க வேண்டுமென்று சென்ற பல ஆண்டுகளாகவே முயன்று வந்தேன். அந்த முயற்சியின் பயனே இந்த அடுக்குமொழி அகராதி. தமிழிலக்கியத்தில் இஃது ஒரு புது முயற்சி. இந்த முயற்சி என் மெய்வருத்தக் கூலி தரும் என்றே நம்புகிறேன். தமிழில் வழங்கும் அடுக்கு மொழிகள் எண்ணில்லாதவை. எனினும் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்கு மொழிகளை இங்கே தொகுத்துத் தந்துள்ளேன். இன்னும் சில ஆண்டுகள்