பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னிசையாய் இருக்கும் இறைவன்

ஏழை எளியவர்களுக்கு இரங்குதல்

ஏழைபாழைகள் - ஏழைகள்

ஏழைபாழைகளை வயிற்றிலடித்து வாயில் மண்ணைப் போடல்

ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் (பழ)

ஏற்பும் வாய்ப்புமின்றித் தாறுமாறாகப் பேசல் (அப் பாத்)

ஏற்றக்குறைச்சல் - ஏற்றத்தாழ்ச்சி

ஏற்றத் தாழ்வுகளை (தாழ்ச்சிகளை) நீக்குதல்

ஏற்றம் இறக்கம் மேடுபள்ளம் (எல்லாம் பெற்றதே வாழ்க்கை )

ஏற்றமும் இழிவும் ஏற்றமும் தோற்றமும் உடையோன் (வில்லி 10-16)

ஏற்றியும் போற்றியும் புகழ்ந்துரைத்தல்

ஏற்றுப் போற்றுதல்

ஏற்றோர்க்கு இல்லையென்னாது இயைந்தமட்டும் ஈதல்

ஏற இறங்கப் பார்த்தல்

ஏறக்குறைய - கிட்டத்தட்ட

ஏறுக்குமாறு பேசுதல்

ஏறுங்கூறுமாய்க் கிடத்தல் - தாறுமாறாய்க் கிடத்தல், குழப்பமாய்க் கிடத்தல்

ஏறுமாறு - தாறுமாறு, குளறுபடி, குழப்பம்

ஏன் எதற்காக என்று கேட்டல்

ஏனபானம் - தட்டுமுட்டு, பாத்திரபண்டம்

ஏனோதானோ என்றிருத்தல் - அசட்டையாயிருத்தல்

ஐசாபைசா இல்லாமல் கணக்குத் தீர்த்துவிடல்

ஐசாபைசாவாய்ச் சொல்லல் - முடிவாகச் சொல்லல்