பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44

ஐது நொய்தாக இருத்தல் மிக லேசாக இருத்தல்

ஐந்தரு நிழற்கீழ் அரசு வீற்றிருக்கும் இந்திரன் (குமர 570)

ஐயந்திரிபற அறிந்து கொள்ளுதல் ; கற்றல்

ஐயமும் அச்சமும் அடைதல்

ஐயோ அப்பா என்று அலறித் துடித்தல்

ஐயோ என்று அழுது புலம்புதல்

ஐயோடி அப்பாடி என்று கத்துதல் (கல்கி)

ஒசிந்து ஒல்கியிருக்கும் கொடி

ஒட்டி உலர்ந்த கன்னங்கள்

ஒட்டி உலர்ந்த உட்குழிந்த வயிறுகள் (ரகுநாதன்)

ஒட்டி உறவாடிப் பழகுதல்

ஒட்டிக்கு இரட்டி

ஒட்டி நின்று உறவாடல்

ஒட்டிய வயிறும் உலர்ந்த உதடுமாய் இருத்தல்

ஒட்டு உறவு அற்றுப் போதல்

ஓட்டுப்பற்று இல்லாதவன் - ஆசாபாசம் இல்லா தவன்

ஒட்டும் உறவும் விட்டுப் போதல்

ஒட்டுமில்லை உறவுமில்லை

ஒட்டு மொத்தம் - முழு மொத்தம்

ஒட்டுறவாய் இருத்தல்

ஒட்ப நுட்பங்களை ஓர்ந்தாய்ந்தும் உய்த்துணர்ந்தும் அறிதல்

ஒடுக்க வணக்கம் - அடங்கி வழிபடல்

ஒடுக்கமாகவும் அடக்கமாகவும் நிற்றல்

ஒடுங்கிச் சுருங்கிய வயிறு

ஒடுங்கி முடங்கிய உடல்

ஒடுங்கு நுண்மருங்குல் (சிறுபாண் 135)

ஒண்டிசண்டியாய்க் காட்டுவழி போதல்