பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45

ஒதுக்குப் பொதுக்குப் பண்ணுதல் - பண மோசம் பண்ணல், சொத்தை மறைத்து வைத்தல்

ஒதுங்கிப் பதுங்கியிருத்தல்

ஒதுங்கியும் பதுங்கியும் நடத்தல்

ஒப்ப செப்பம் - சமம் ஒப்பாரும் உயர்ந்தாரும் இல்லை

ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒளிவிளக்கு (நம்மாழ்வார் தாலாட்டு 116)

ஒப்பு உவமை இல்லாத

ஒப்புக்குச் சப்புக் கொட்டுதல் - மனமின்றிச் செய்தல்

ஒப்புக்கொப்பாரம் - விருந்தினரை உபசரித்தல்

ஒப்புயர்வு அற்ற - ஈடிணையற்ற

ஒரு நாளுமில்லாத திரு நாளாயிருக்கிறது

ஒருபுறமாக ஒதுங்கியிருத்தல்

ஒரே கூட்டமும் சந்தடியுமாயிருத்தல் (கல்கி)

ஒல்காப்புலமைத் தொல்காப்பியனார்

ஒல்காப் பெரும்புகழ்த் தொல் பெரும் பழங்கொடி (பாரதிதா)

ஒல்கி நுடங்கிய இடை

ஒல்லென்று ஒலிக்கும் ஒலிபுனலூரன் (ஐந்திணை 50-28)

ஒல்லென ஒலித்து மெல்லெனப் பாயும்

ஓடை நீர் ஒலி ஆர்கடல் சூழ் உலகம் (கம்ப 2-4-62)

ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை (புறம் 306)

ஒழுக்கம் நிறைந்த விழுப்பெருங் கேள்வி மெய்த் தவர் (குமர 458)

ஒழுக்கம் விழுப்பந்தரும்

ஒழுக்கமும் பண்பாடும் உடையவர்

ஒழுக்க வழக்கங்கள்

ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கெழுமிய பாட்டு