பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47

ஓட்டமும் நடையுமாகச் செல்லுதல்

ஓட்டமும் பெரு நடையுமாய் ஓடிவரல்

ஓட்டை உடைசல் விரிசல் இல்லாத பாத்திரம்

ஓட்டை சாட்டையான - உபயோகமற்ற

ஓட்டையுடைசல் - உடைந்த பாண்டங்கள்; பயனற்ற பொருள்கள்

ஓட்டோட்டமாக ஓடுதல்

ஓடி ஓதுங்கு

ஓடி ஓடிப் பாடுபடல்

ஓடித்திரிந்து உழல்தல்

ஓடியாடி விளையாடுதல்; திரிதல்

ஓதாது உணர்ந்த போதன் (பெ. தொகை 1947)

ஓதி உணர்ந்து பின் ஊருக்கு எடுத்துரைப்பவர்

ஓய்ச்சல் ஒழிச்சல் இல்லாமல் பாடுபடல்

ஓய்ச்சல் ஒழிவு (கல்கி-அலை)

ஓய்ச்சலுமில்லை ஒழிவுமில்லை

ஓய்வு ஒழிவு இன்றி உழைத்தல்

ஓய்வு சாய்வு இல்லாதவன்

ஓய்வும் உறக்கமும் இன்றி

ஓயாத ஒழியாத சண்டை

ஓயாமல் ஒழியாமல் உழைப்பவர்; வந்துகொண்டிருத்தல்

ஓர்ந்து ஆராய்தல்

ஓலமும் அரற்றலும்

கக்கல் கரைசல்-கலங்கல் நீர்

கக்கலுங் கழிச்சலும் - வாந்தியும் பேதியும்

கக்கலும் விக்கலுமாயிருக்கும் பயிர்- கதிர் ஈன்றதும் ஈனாததுமாயிருக்கும் பயிர்

கங்குகரை காணாத கடல்