பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47

கங்கு கரையில்லாமல்- அளவில்லாமல்

கங்குங் கரையுமறப் பெருகும் நீர்

கங்குலும் பகலும் (- இரவும் பகலும்) உழைத்தல்

கங்கை என்னும் கடவுள் திருநதி (கம்ப 2-7-10)

கங்கை காவிரிகளில் நீராடல்

கச்சிதமாகவும் கவர்ச்சியாகவும் வாசித்தல்

கச்சேரி கரைவாசல் உத்தியோக முதலிய வேலை பார்க்குமிடம்

கசக்கிப் பிழிதல்-மிகுதியாக வேலை வாங்குதல்

கசங்கி நசுங்கிப் போதல்

கசடறக் கற்றல்

கசப்போடும் வெறுப்போடும் அளித்தல்

கஞ்சப் பிசு நாறி - பெரும் உலோபி

கஞ்சி தண்ணீர் ஒன்றும் குடிக்காமல் காரியம் செய்தல்

கட்டக் கசப்பு - கடுங் கசப்பு

கட்டங் கறுப்பான மேனி

கட்டங்கறையேனென்றிருத்தல்-மிகக் கறுப்பாக இருத்தல்

கட்ட நிட்டூரங்களைப் பொறுத்துக்கொள்ளல்

கட்டழகுடைய காளை

கட்டி அணைத்துக் கொள்ளல்

கட்டிக் காத்து வளர்த்து வருதல்

கட்டிக் காப்பாற்றுதல்

கட்டிக்கொண்டு கண்ணீர் மல்கக் கதறல்

கட்டித் தழுவி அணைத்துக் கொள்ளல்

கட்டித் தழுவி உச்சிமோந்து கண்ணீர்விட்டு மகிழ்தல்

கட்டிமுட்டிகள் - சிறியவும் பெரியவுமான கட்டிகள்

கட்டியணைத்து முத்தமிடல்

கட்டியும் முட்டியுமாய் உழுது போடல்