பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51

கண்டது கற்கப் பண்டிதனாவான்

கண்டதுண்டப் படுத்தல் - வெட்டுதல்

கண்டதுண்டமாக வெட்டுதல் - பல துண்டுகளாக வெட்டுதல்

கண்டதும் கடியதும் - நல்லதும் தீயதும்

கண்டதையும் கடியதையும் தின்னல்

கண்டனை தண்டனை செய்தல் - வைது ஒறுத்தல் (பிரதாப அதி 1)

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

கண்டார் தம் கண்ணும் கருத்தும் கவர் தல் (வைண 2-29)

கண்டாரைக் கொல்லும் கட்டழகு

கண்டான் முண்டான் சாமான்கள் - பயனில்லாதவை (நாடோடி)

கண்டானும் முண்டானும் - வீட்டுத் தட்டுமுட்டுச் சாமான்கள்

கண்டோர் கண்களையும் கருத்தையும் கட்டுகின்ற அழகு (இராமலிங்கசு)

கண்டித்துத் திருத்துதல்

கண்டிக்கவேண்டும் அல்லது தண்டிக்கவேண்டும்

கண்டு கேட்டு உண்டு உடுத்து உற்றறியும் ஐம்புலன்கள் (குறள் 1101)

கண்டு பாகு தேன் எனக் கவித் திறங்கள் பாடி (திரு வாவி. பதிற். அந். 16)

கண்டும் கேட்டும் அறியாத ; களிக்கும் பேறு பெறல்

கண்ணா! மணி வண்ணா!

கண்ணான பேரை யெல்லாம் புண்ணாக்கிக் கொள்ளல்

கண்ணான மனதைப் புண்ணாக்கிவிடல்