பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52

கண்ணினைக் களிப்புறுங் கடிகொள் காவனம் (இரட்ச 21-87)

கண்ணிமை போலக் கரிசனமாய்க் காத்தல்

கண்ணியமாகவும் கட்டுப்பாடாகவும் நடந்து கொளல்

கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்(து)தல்

கண்ணில்லாத கபோதி

கண்ணிலும் கருத்திலும் கலந்த காதல்

கண்ணிழந்தீரோ கருத்திழந்தீரோ (பாரதிதா.)

கண்ணிற்கணிகலம் கண்ணோட்டம் (குறள் 575)

கண்ணிற் காணுமாறு வைத்தல் - அருகிலேயே வைத்தல்

கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தல் (கம்ப 1-8-70)

கண்ணீர் கலுழ்ந்து உகுத்தல் (சிந் 294)

கண்ணீர் சொரிந்து கதறியழுதல்

கண்ணீர் சோரக் கதறி நிற்கும்

கண்ணீர் வடித்துக் கதறுவோர்

கண்ணீர்விட்டுக் கதறியழுதல்

கண்ணீர்விட்டுக் கதறியழுது புரண்டு விம்மி வெதும்பிப் பெருமூச்சுவிடல் (மனுமுறை)

கண்ணீர்விட்டுக் கலங்கிக் கதறுதல்

கண்ணீருங் கம்பலையுமாய்க் காட்சியளித்தல்

கண்ணீரைப் பெருக்கிக் கதறுதல்

கண்ணுக்குக் கண்ணாகவும் உயிருக்கு உயிராகவும் இருத்தல்

கண்ணுக்குக் கண்ணாகவும் பிராணனுக்குப் பிராணனாகவும் வளர்த்தல் (பிரதாப அதி 5)

கண்ணுக்குக் கண்ணான கண்மணி

கண்ணுக்குக் கண்ணான செல்லப்பிள்ளை