பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54

கதித்து ( - விரைந்து)க் குதித்துச் செல்லும் கால் நடைகள்

கதி மோட்சம் இல்லாத கதிர் போல் இளைத்துக் குதிர்போல் பருத்தல்

கதிரவனுந் திங்களுமுள்ள காலமெல்லாம் கதையுங் கற்பனையுமாகச் சொல்லல்

கந்தரை கழிசடை - பயனற்றவை

கந்தல் கூளமாய் (-கந்தர கோலமாய்)க் கிடத்தல்

கந்தலும் பொந்தலும் உடுத்தித் திரிதல்

கந்தினை அனைய திண்தோட் காளையர் (கச். ஆ. பு. 2-39)

கப்புங் கவருமாய்க் கிளைத்தமரம்

கப்புங் கிளையுமாகப் படர்தல்

கப்புச் சிப்பு கடையிலே உப்பு - பேசாதிருங்கள் (பே)

கப்புச்சிப்பென்றிருத்தல் - பேசாதிருத்தல்

கப்புச்சிப்பென்று வாய் திறவாமலிருத்தல்

கபட நாடக சூத்ர கண்ணன் (பாரத நாட)

கபடறியார் சூதறியார் கள்ள மொன்றுந்தாமறியார் (பஞ்ச வனவாசம்)

கபடு சூது இல்லாதவன், அறியாதவன்

கயல்விழியுங் குயில் மொழியும் உடையவள்

கர்ணபரம்பரைக் கட்டுக்கதை

கர்மம் பக்தி ஞானயோக நெறிகள்

கரடி புலி சிங்கம் வாழும் காடு

கரடு முரடான வழி - ஒழுங்கற்ற வழி

கரவு மறைவு இன்றிப் பேசுதல்

கரார் கண்டி தமாகச் சொல்லல்

கரிந்து தீய்ந்து போதல்

கரிய பெரிய காடு