கருகித் தீய்ந்து போதல்
கருத்தில் இருத்து
கருத்தினுங் கருதவரிய நுண்ணியன் (சோணசைல 7)
கருத்தும் கவர்ச்சியும் உடைய சொற்பொழிவு
கருத்தூன்றிக் கவனித்துப் பார்த்தல்
கருணை பூத்தலர்ந்த கமலக்கண்ணன் (குமர 567)
கருந்தூள் செந்தூள் பறக்கச் செய்தல்
கரும்புஞ் சுரும்பும் அரும்பும் பொரும்படைக் காமர் வில்வேள் (குமர 555) [கரும்பு காமனுக்கு வில் , சுரும்பு, நாண் ; அரும்பு - அம்பு]
கருவிகரணங்கள் - இந்திரியங்களும் மனமும்
கருவிலே திருவுடையார்
கருவினைத் தரும் இருவினைத் தொடர் (திருப்பு)
கரை காணாத களிப்புக் கடலில் மூழ்குதல் (பிரதாப. அதி.35)
கரைசிந்து திரை சிந்து நுரைசிந்து விரைசிந்து (வில்லி 33-2) (சிந்து - கடல்)
கரை துறை தெரியாத இருட்டு
கரைந்து உருகல்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருடன் (பழ)
கல் இயல் வன்னெஞ்ச வஞ்சக் கண்ணிலாப் பாதகர் (இரட்ச 21-315)
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன் றிய (மொழி)
கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி (குறுந் 134)
கல்மனமும் கரைந்துருக கல்யாணம் காட்சிகளுக்கு நிறையச் செலவழித்துக் கடனாளியாதல்