உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
57

கலங்கிக் குழம்பிய மனம்

கலங்கிக் கையற்றிருத்தல் (குறிஞ்சிப். 24)

கலங்கிக் கையற்று அலமரல் ; புலம்புதல்

கலங்கிப் புரண்டழுது கதறல்

கலங்கி மலங்கி இருக்கும் நீர்

கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருகுதல் (திருவா 1-57)

கலந்து உறவாடிக் களித்தல்

கலவமயிலுங் குயிலும் பயிலுங் கடல்போல் காவேரி (ச 67-5)

கலவரமும் கல்வீச்சும் ஏற்படுதல்

கலவரமும் குழப்பமும் விளைவித்தல்

கலித்துத் தழைக்கும் பயிர்

கலுக்குப் பிலுக்கு - ஆடம்பரம் (யாழ். அக)

கலை, சமயம், மொழி, பண்பாடுகளைக் காத்தல் (ஆடை) கலைந்து குலைந்துவிடல்

கவலை நெஞ்சத்து அவலம் (தீர்த்தல்) (புறம் 174)

கவலையுங் கஷ்டமும் கொண்டிருத்தல்

கவலையோ கஷ்டமோ (அக்கரையோ) இல்லாதவன்

கழுக்கு மொழுக்கென்று இருத்தல் - பருத்துக் கொழுத்து இருத்தல்

கள்ளங்கவடு சூதுவாது தெரியாதவன்

கள்ளச் சந்தையில் கொள்ளை லாபமடிப்பவர்

கள்ளங்கபடு இல்லாத வெள்ளையுள்ளம்

கள்ளம் கரவு (கரவடம்) இல்லாதவர்

கள்ள மனம் துள்ளும்

கள்ள மார்க்கெட்டில் (-சந்தையில்) கொள்ளை லாப மடிப்போர்