பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62

காரமாயும் கடுப்பாயும் பேசுதல்

காரியம் செய்யாது வீரியம் பேசலாமா?

காரிருள் மேய்ந்து ஒளி விரிக்கும் கதிரோன் (கூர்மபு 30-94)

காருள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் (அண்ணா )

கால் தடுக்கி இடறி விழல்

காலங் கா(ர்)த்தாலே - அதிகாலையில்

காலத்திற்கேற்ற கோலம் பூணுதல்

காலத்திற் கொவ்வாத கருத்து

காலத்துக்குத் தக்க கோலம் கொள்ளுதல்

காலதேச வர்த்தமானங்களை அறிந்திருத்தல்

காலம் செய்யும் கோலம்

காலம் நேரம் பார்க்காமல்

காலம் மாறினால் கருத்தும் மாறும்

காலமும் கணக்குங் கடந்த பழமை (யுடைய)

காலமும் கற்பனையுங் கடந்த கடவுள்

காலனும் அஞ்சும் கடுங்கண் மறவர்

காலனும் அஞ்சும் காய்சின மொய்ம்பினார் (கம்ப 4-17-9)

காலையும் மாலையும் கடவுளைத் தொழு

காலோடி கையோடி - தொழிலற்றுத் திரிபவன்

காவளர்த்தும் குளந்தொட்டும் அறப்பணி செய்தல்

காற்றாய்ப் பறந்து கடுகியே வாரும் (பஞ்ச. வன வாசம் 1)

காற்றினும் கடுகிச் செல்லுதல்

காற்றும் மழையுங் கலந்தடிக்க

கானுன் கோனுன் என்று காதில் கடுக்கன் தொங்கிக் கொண்டிருத்தல்

கிஞ்சுவாய் அஞ்சுகம் (அஞ்சுகம் - அழகிய கிளி)