உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64

குடித்துக் கும்மாளமடித்தல்

குடித்துக் கூத்தாடித் தத்தாரியாய்த் திரிதல் (சந்தி ரிகா 41)

குடித்துக் கூத்தாடுதல்

குடித்துக் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போதல் (கல்கி)

குடியும் குடித்தனமுமாக வாழ்தல்

குடியும் கூத்தும் மலிந்த நாடு

குண்டக்க மண்டக்கமாய்க் கட்டித் தூக்கிவரல் - சுருட்டிக் கட்டித் தூக்குதல்

குண்டல மண்டலமாய்ச் சுருண்டு வளைந்திருத்தல்

குண்டுக்கும் குண்டாந்தடிக்கும் பயப்படாத வீரர்கள்

குண்டுகுளம் (குண்டு - குழி)

குண்டுங் குழியுமான பாதை

குணங்களும் குறிகளுமிலாக் குணக்கடல் (திருவா 572)

குணங்குடியிருந்த சிந்தைக் குரிசில் (இரட்ச 21-120)

குணங்குற்றம் அறிந்து கொள்ளல்

குணங்குறிகளைக் கண்டு பிடித்தல்

குணங்குறி குலங்கொற்றங் கோத்திரம் ஒன்றுமில்லாதவன்

குணமெனும் குன்றேறி நின்றார் (குறள் 29)

குணமுங்குலமும் உடையார்

குணமும் மணமும் நிறைந்த பொடி

குத்தலும் குடைச்சலும் உடம்பில் தோன்றுதல்

குத்தும் கொலையும் நடந்த பிரதேசம்

குதப்பிக் குதட்டி மெல்லுதல்

குதலைக் கிளிமென்மொழி (குமர 46)

குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர் (சிலப்: 22-129)