குதலைத் தெள்ள முதின் தேனிற் கொண்ட மென்பவளச் செவ்வாய் மதலை (பாகவத பு. 4-3-12)
குதலை மென்மொழி மதலை (வி நாயபு 80-111)
குதலையந் தீஞ்சொற் புதல்வன் (சோணசைல 38)
குத்தலாகவும் கிண்டலாகவும் பேசுதல்
குத்தலும் குடைச்சலும் உடைய காது
குத்திக் குடைந்தெடுத்தல்
குத்திக் கொழித்து அரிசியாக்குதல்
குத்துப்பழி வெட்டுப்பழி (பெருஞ்சண்டை) யாயிருத்தல்
குத்தும் கொலையுமாயிருந்தது
குதித்துக் கும்மாளமிட்டபடி வருதல்
குதூகலத்துக்கும் கோலாகலத்துக்கும் பெயர்போன இடம் (கல்கி)
குதூகலத்துடனும் கோலாகலத்துடனும் (விழாக்) கொண்டாடுதல்
குதூகலமாயும் கோலாகலமாயும் வாழ்க்கை நடத் துதல்
குதூகலித்து அகமகிழ்தல்
குப்பைகூளங்களைக் கூட்டிக் குவித்து வைத்தல்
கும்பக்குழிய அளத்தல்
கும்பிக் கொதித்து நிற்றல்
கும்பிட்டுக் கூத்தாடி வாங்குதல்
கும்பிட்டு வணங்குதல்
கும்மாளமுங் கூத்தும் அடித்தல்
கும்மி கோலாட்டம்
குமரிமுதல் இமயம் வரை
குமுறலும் கொந்தளிப்பும்
குமுறி ஆர்ப்பரிக்கும் நெஞ்சம்
குமைத்துக் குமட்டிக்கொண்டு வாயாலெடுக்க வருதல்,